/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீட்டர் பொருத்திய ஆட்டோவுக்கு எதிர்ப்பு டிரைவர்கள் வாக்குவாதம்-போலீசில் புகார்

ADDED : மே 25, 2025 12:58 AM
பு.புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்டில், 39 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த அலாவுதீன், மீட்டர் கட்டணம் மற்றும் மினிமம் சார்ஜ், 50 ரூபாய் என எழுதப்பட்ட போர்டுடன் பொருத்திய ஆட்டோவை ஸ்டாண்டில் கொண்டு வந்து நிறுத்தினார்.
இதற்கு மற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போர்டை அகற்றுமாறும் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை இயக்கக் கூடாது எனக்கூறி மற்ற டிரைவர்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். புன்செய் புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக தீர்த்து வைத்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் சார்பில், புளியம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: புன்செய் புளியம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர். உள்ளூர் குறைந்தபட்ச கட்டணமாக, 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அடாவடியாக கேட்கின்றனர். இரவு நேரம் என்றால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். வாடகை ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயித்து, அதிக கட்டணம் கேட்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.