/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரைவரை கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு
/
டிரைவரை கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு
ADDED : ஆக 02, 2025 01:45 AM
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த தாளக்கரையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 30; வாடகை கார் டிரைவர். கடந்த, 2015 செப்.,24ல் மூலனூரை அடுத்த ஆண்டிக்காடு என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.
மூலனுார் போலீசார் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையை சேர்ந்த குட்டி (எ) வீரபாபு, 36, கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது. காரை கடத்துவதற்காக ஜெகதீஸ்வரனை வீரபாபு கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பான வழக்கு தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளி வீரபாபுவுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 15 ஆயிரம் ரூபாய் விதித்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் வீரபாபு அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் மணிவண்ணன் ஆஜரானார்.