ADDED : நவ 18, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்
புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி, ராவுத்தம் புதுார் குட்டையில்
நேற்று முன்தினம், 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. புன்செய்
புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதே பகுதியை
சேர்ந்த மயில்சாமி, 26, என்பது தெரிந்தது.
மயில்சாமி சற்று மனநிலை
பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். குட்டையில் தவறி
விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து, போலீசார்
விசாரிக்கின்றனர்.
