ADDED : செப் 17, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கனிராவுத்தர் குளம் பெரிய சேமூர் மேற்கு வீதியை சேர்ந்த சேகர் மகன் சூர்யா, 24; மில் மிஷின் ஆப்பரேட்டனர்.
மதுவுக்கு அடிமையான நிலையில், பலமுறை தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையும் பெற்றுள்ளார். கடந்த, 14ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு போதையில் சென்றார். தந்தை சேகர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சூர்யா அடித்துள்ளார்.பின் அறைக்குள் புகுந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.