ADDED : செப் 02, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்தவர் தண்டபாணி, 65; தறி ஓட்டும்
தொழிலாளி. மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் மனைவி லதா, 55;
தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் சத்தம் போடுவார். கடந்த,
31ம் தேதி மதியம் வழக்கம் போல் போதையில் வீட்டில் சத்தம் போட்டு
கொண்டிருந்தார். திடீரென சத்தம் வரவில்லை.
சந்தேகமடைந்த மனைவி வீட்டுகள்
சென்று பார்த்தபோது மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
