ADDED : செப் 02, 2026 06:34 AM
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் காவிரி கரை சோழீஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில்
நேற்று முன்தினம் மாலை, 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் நீரில் மிதந்தது.
கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்தது. லுங்கி, சட்டை
அணிந்திருந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து
விசாரிக்கின்றனர்.
* கோபி அருகே குப்பந்துறை கீழ்பவானி
வாய்க்காலில், பெண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி கடத்துார்
போலீசார் நேற்று காலை சென்றனர். நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள்
உதவியுடன் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், சத்தியமங்கலம் அருகே
சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த மணி, 66, என தெரிந்தது. அவரின் மகன்
மனோகரன் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
