மக்காசோளம், நிலக்கடலை 16க்குள் காப்பீடு செய்யுங்கள்
மக்காசோளம், நிலக்கடலை 16க்குள் காப்பீடு செய்யுங்கள்
ADDED : செப் 02, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பெருந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கலைசெல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பிரதம
மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு காரீப் பருவத்தில்
மக்காசோளம், நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு அறிவித்துள்ளனர்.
மக்காசோளம் ஏக்கருக்கு, 740 ரூபாயில் காப்பீடு தொகை செலுத்தி, 37,000
ரூபாய் வரை இழப்பீடு தொகை பெறலாம். அதுபோல நிலக்கடலை பயிர் ஏக்கருக்கு,
678 ரூபாய் தொகை செலுத்தி காப்பீடு செய்து, 18,700 ரூபாய் வரை காப்பீடு
இழப்பீடு பெறலாம். இப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும், 16ம் தேதி கடைசி
நாளாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
