/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சரக்கடிக்க பள்ளி மாணவிகளிடம் தண்ணீர் கேட்கும் போதை ஆசாமிகள்
/
சரக்கடிக்க பள்ளி மாணவிகளிடம் தண்ணீர் கேட்கும் போதை ஆசாமிகள்
சரக்கடிக்க பள்ளி மாணவிகளிடம் தண்ணீர் கேட்கும் போதை ஆசாமிகள்
சரக்கடிக்க பள்ளி மாணவிகளிடம் தண்ணீர் கேட்கும் போதை ஆசாமிகள்
ADDED : ஜன 22, 2024 12:00 PM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே, செல்லம்பாளையம் மாதிரிப்பள்ளி ஹாஸ்டல் மாணவிகளிடம், 'சரக்கில்' கலந்து குடிக்க தண்ணீர் கேட்டு, போதை ஆசாமிகள் தொந்தரவு செய்வதாக எழுந்த புகார் அடிப்படையில், அந்தியூர் எம்.எல்.ஏ., அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே செல்லம்பாளையம் மாதிரிப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கான ஹாஸ்டல் வசதி உள்ளது. இங்கு, 90 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். ஹாஸ்டலை ஒட்டி சிதிலமடைந்த அரசு கட்டடம் உள்ளது.
அங்கு அமர்ந்து மது அருந்தும் சில இளைஞர்கள் பாட்டில்களை உடைப்பதும், தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்வதும் வாடிக்கை. சில நேரங்களில் மாணவிகளிடம், போதை ஆசாமிகள் மதுவில் கலந்து குடிக்க தண்ணீர் கேட்பதும், கிண்டல் செய்வதும் தொடர்கிறது. பலமுறை எச்சரித்தும், போதை ஆசாமிகளின் சேட்டை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்திடம் புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு சென்ற அவர், சிதிலமடைந்த கட்டடத்தை பார்வையிட்டார். பின் தலைமையாசிரியர் காதர், பள்ளி மேலாண்மை குழுவினரிடம் விசாரித்தார்.
கட்டடத்தை இடித்து விட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர். முறையாக அரசுக்கு கடிதம் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., கூறினார். தொடர்ந்து, அங்கிருந்த வெள்ளித்திருப்பூர் போலீசாரிடம், நாள்தோறும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.