/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
/
ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 21, 2025 02:20 AM
ஈரோடு,
ஈரோடு, நந்தா சித்தா, இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
போதை மருந்து பழக்கத்தின் சமூகம் மீதான தாக்கங்கள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர்
சண்முகன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம், ஆய்வாளர் சிவகாமி ராணி, எமரால்ட் ரோட்டரி கிளப் தலைவர் பரணி மற்றும் ஈரோடு மாவட்ட போதை பொருள் எதிர்ப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் போதை மருந்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். பின்னர் நடந்த ஓவியப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஈரோடு எஸ்.பி.,
அலுவலகத்தில் நடந்த முகாமை
எஸ்.பி., சுஜாதா தொடங்கி வைத்தார்.
நந்தா சித்த மருத்துவக்கல்லுாரி முதல்வர் மேனகா, போதை பொருள் ஒழிப்பு கிளப் உறுப்பினர்கள், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி முதல்வர் ரீவ்ஸ் ஜஸ்டலீன் தாஸ், பயிற்சி மாணவர்கள், அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர் த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நிர்வாக அலுவலர் மருத்துவர் தர்மராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.