/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நேரம் தாண்டி மண் எடுப்பு தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
/
நேரம் தாண்டி மண் எடுப்பு தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
நேரம் தாண்டி மண் எடுப்பு தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
நேரம் தாண்டி மண் எடுப்பு தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ADDED : ஆக 21, 2025 02:21 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை, துார் வாரும் வகையில் விவசாயிகளுக்கு, வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறை துறை அதிகாரிகள் முதல் கட்டமாக, 12 விவசாயிகளுக்கு அனுமதி அளித்திருந்தனர். இப்பணி நேற்று தொடங்கியது. காலை 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 6:00 மணி வரை மண் எடுக்க தொடங்கியுள்ளனர்.
அதிகாரிகள் அனுமதி வழங்கிய நேரத்தை மீறி, வண்டல் மண் எடுத்து மாலை 6:00 மணிக்கு முதல் கட்டமாக மூன்று டிராக்டரில் அணைக்கு வெளியே செல்ல முயன்றனர். உடனே நீர்வள ஆதாரத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, கேட்டை பூட்டு போட்டனர். இதனால் சிறிது நேரம் விவசாயிகள் அணை பகுதிக்குள்ளேயே நின்றனர். இதையடுத்து, வண்டல் மண்ணை திரும்ப எடுத்த அதே இடத்தில் கொட்டி விட்டு, காலி டிராக்டர்களுடன் வந்த பிறகு பணியாளர்கள் கேட்டை திறந்து விட்டனர்.