ADDED : ஜூன் 07, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு பகுதியில், போதை மாத்திரை
விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, சித்தோடு போலீசார்
சோதனையில் ஈடுபட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், 27, அங்கு
நின்றிருந்தார். அவரிடம் சோதனை செய்ததில், 10 போதை மாத்திரை
இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இவர் மீது
ஏற்கனவே சித்தோடு ஸ்டேஷனில் ஒரு கஞ்சா வழக்கு, போதை மாத்திரை
விற்றதாக இரு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
