/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
ஈரோட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2025 12:59 AM
ஈரோடு, சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதி நவீன மின்னணு வாகனம் மூலம் போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த கருத்துக்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்
பட்டன.
விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் மாவட்ட கலால் பிரிவு, பிரஜா பிதா பிரம்ம குமாரிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு பள்ளி, கல்லுாரி மாணவ,மாணவியர் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின பேரணியை நடத்தினர்.
ஈரோடு எஸ்.பி., சுஜாதா, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானம் அருகே மல்லிகை அரங்கில் பேரணி துவங்கியது. ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் சாலை,ஜி.எச் ரவுண்டானா, பெருந்துறை சாலை வழியே கலெக்டர் அலுவலகம் சென்றது. பேரணிக்கு
டி.எஸ்.பி. சண்முகம் தலைமை வகித்தார்.
* அந்தியூரில், தாசில்தார் கவியரசு தலைமை வகித்து, போதை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்துாரி முன்னிலை வகித்தார். அந்தியூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக, பவானி ரோட்டிலுள்ள வட்டார இயக்க மகளிர் மேலாண்மை அலுவலகத்தில் பேரணி முடிவுற்றது.
வட்டார இயக்க மேலாளர் சுகந்தி, ஒருங்கிணைப்பாளர்கள் இந்துமதி, புவுனப்பிரியா, திருமூர்த்தி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.