தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 26, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில், போதை பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து, கண்காட்-சியை பார்வையிட்டு, பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேச்சுகளை கேட்டறிந்து, நிகழ்வில் பேசினார். பிறகு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 15 குழந்-தைகள் இல்லம் சார்பில் அமைக்கப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த கருத்து காட்சி அரங்கில் சிறந்த காட்சிகளில், 3 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்-டது. குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சிறப்பாக செயல்பட்ட, போதை பொருள் தடுப்பு பணியில் செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்-கப்பட்டது.எஸ்.பி., கிரண் ஸ்ருதி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா-மகேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர் கமலவேணி, அலுவலக மேலாளர் (கலால்) வீரலட்சுமி உட்பட பலர் பங்-கேற்றனர்.

* போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்-வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. எஸ்.பி., கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி-யபடி சென்றனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்-துக்குமரன், இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us