ADDED : டிச 23, 2024 09:28 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., காய்கறி மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் பெய்த புயல் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் வரத்து குறைந்து காணப்படுகிறது. அதேசமயம் ஐயப்ப சுவாமி சீசன் என்பதால் காய்கறிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி நேற்று ஒரு கிலோ, 30 முதல் 40 ரூபாய் வரை விற்றது. சில தினங்களுக்கு முன், 20 ரூபாயாக இருந்தது. இதேபோல் கடந்த வாரம் கிலோ, 50க்கு விற்ற ஒரு கிலோ கத்திரிக்காய், 70 ரூபாய்; பச்சை மிளகாய் கிலோ, 60 ரூபாயில் இருந்து, ௭௦ ரூபாயாக உயர்ந்தது. முருங்கை கடந்த வாரம் கிலோ, 250 ரூபாய்க்கு விற்ற நிலையில், 300 ரூபாய்க்கு நேற்று விற்றது.
வ.உ.சி., மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வெண்டை-40, பாகல்-50, பீர்க்கன்-70, கொத்தவரை-50, பட்ட அவரை-90, கருப்பு அவரை-140, புடலங்காய்-50, சுரக்காய்-25, பூசணிக்காய்-30, கேரட்-80, பீன்ஸ்-90, பீட்ரூட்-90, காலிபிளவர்-35, முட்டைகோஸ்-35, சின்ன வெங்காயம்-60, பெரிய வெங்காயம்-40, ஊட்டி உருளைக்கிழங்கு-70, சேனைக்கிழங்கு-50, கருணை கிழங்கு-70, பழைய இஞ்சி-160, புதிய இஞ்சி-60. பச்சை பட்டாணி-120.