/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருங்கை ஒரு கிலோ ரூ.105க்கு விற்பனை
/
முருங்கை ஒரு கிலோ ரூ.105க்கு விற்பனை
ADDED : நவ 25, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 2 டன் முருங்கை வரத்தானது. ஒரு கிலோ, 70 ரூபாய் வரை விலை போனது. நேற்று வரத்து வெகுவாக சரிந்து, 500 கிலோ மட்டுமே வரத்தானது.
இதனால் விலை எகிறியது. ஒரு கிலோ, 95 ரூபாய் முதல் ௧05 ரூபாய் வரை விற்பனையானது. தொடர் மழையால் பூக்கள் உதிர்ந்து, காய்ப்பு திறன் குறைந்ததே, வரத்து குறைய காரணம் என்று, விவசாயிகள் தெரிவித்தனர்.