தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மதுபோதை லாரி டிரைவருக்கு அபராதம்

மதுபோதை லாரி டிரைவருக்கு அபராதம்

மதுபோதை லாரி டிரைவருக்கு அபராதம்


ADDED : ஜூன் 15, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகே, டூவீலரில் நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கதக்க பெண், உறவுகார பெண்ணுடன் சென்றார்.

அப்போது பின்னால் வந்த செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி, டூவீலரில் மோதி நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பெண் டூவீலரில் லாரியை துரத்தி சென்று, முனிசிபல் காலனி அருகே மடக்கி பிடித்தார். லாரி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவே, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், டிரைவரை விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் டிரைவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. முனிசிபல் காலனியில் ஒரு வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய சென்றது தெரியவந்தது. அப்பெண் புகாரளிக்கவில்லை. லாரி டிரைவர் பவானி, அந்தியூர் பிரிவை சேர்ந்த சரவணன், 39, என்பது தெரிந்தது. குடிபோதையில் வாகனம் இயக்கியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us