ADDED : மே 27, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதரன். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் டிபன் வாங்குவதற்கு பைக்கில் சென்றார். பெரிய செட்டிபாளையம் பிரிவு சாலையில் திரும்ப முற்பட்டபோது,
எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. டி.எஸ்.பி., நிலை தடுமாறி கீழே விழுந்தார். கால் மூட்டுகளில் சிராய்ப்பு, நெற்றியில் காயம் ஏற்பட்டது. கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.