/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து குறைவால் மொச்சை கிலோ ரூ.150
/
வரத்து குறைவால் மொச்சை கிலோ ரூ.150
ADDED : ஜன 13, 2025 02:57 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகளின் விற்பனை நேற்று களை கட்டியது. இதனால் மார்கெட்டுக்கு வழக்கத்தை விட காய்கறி வரத்து அதிகரித்தது.
அதேசமயம் மொச்சைப்பயிறு வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும், 90 ரூபாய்க்கு விற்றது, ௧50 ரூபாயாக நேற்று விலை உயர்ந்தது. மார்க்கெட் பிற காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): தக்காளி-20, கத்திரி-50, வெண்டை-40, புடலை-40, பீர்க்கன்காய்-60, சுரைக்காய் ஒன்று-16-, சாம்பல் பூசணி-20, சர்க்கரை பூசணி-20, அவரை-90, கொத்தவரை-60, குண்டு மிளகாய்-55, மரவள்ளி கிழங்கு-30, தேங்காய்-30, சேனை-50, கருணை-80, இஞ்சி-50, உருளைகிழங்கு-35, காளிபிளவர் ரூ.30 விற்பனை செய்யப்பட்-டது. பொங்கல் பண்டிகையையொட்டி, வாழைத்தார் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூவன் தார் ரூ.500 முதல் ரூ.800, தேன்வாழை - ரூ.500 முதல் ரூ.600, செவ்வாழை ரூ.700 முதல் ரூ.1,200, ரஸ்தாளி ரூ.500, நேந்திரம் ரூ.700 க்கு விற்றது.