/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலை, பவளமலையில் 27 ஜோடிகளுக்கு 'டும்டும்'
/
பச்சைமலை, பவளமலையில் 27 ஜோடிகளுக்கு 'டும்டும்'
ADDED : டிச 06, 2024 07:45 AM
கோபி: கோபியில், பச்சைமலை, பவளமலை, பாரியூர் என மூன்று கோவிலில், நேற்று ஒரே நாளில், 27 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
கோபியில் பிரசித்தி பெற்ற பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்கள் உள்ளன. வளர்பிறை முகூர்த்தம் என்பதால், பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணி முதல், காலை 10:00 மணி வரை, மொத்தம் 17 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதேபோல், பவளமலை முருகன் கோவிலில், அதிகாலை 5:00 முதல், 6:00 மணிக்குள், மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. தவிர, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 முதல், 6:00 மணிக்குள், 7 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. கோபியில் ஒரே நாளில், பிரசித்தி பெற்ற மூன்று கோவிலில், 27 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.