/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசிபெற்ற துர்கா ஸ்டாலின்
/
சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசிபெற்ற துர்கா ஸ்டாலின்
சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசிபெற்ற துர்கா ஸ்டாலின்
சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசிபெற்ற துர்கா ஸ்டாலின்
ADDED : நவ 01, 2024 01:39 AM
சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசிபெற்ற துர்கா ஸ்டாலின்
சென்னைசென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளிடம் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஆசி பெற்றார்.
விஜய யாத்திரைக்காக, கடந்த மாதம், 28ம் தேதி சென்னை வந்த சிருங்கேரி சன்னிதானம், நான்காவது நாளாக சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இதில், காலை 8 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சன்னிதானத்திடம் ஆசி பெற்றனர்.
தொடர்ந்து, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.
மாலை 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்தார்.