/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் புழுதி குளியலில் வாகன ஓட்டிகள் தோண்டி குவித்த மண்ணால் நித்தமும் அவதி

ADDED : ஆக 12, 2024 06:46 AM
ஈரோடு: ஈரோட்டில் சாலை மேம்பாட்டு பணிக்காக குவித்து வைக்கப்பட்ட மண், காற்றில் பறப்பதால் புழுதி குளியலில் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.ஈரோடு மாநகரில் மாநகராட்சி மட்டுமின்றி நெடுஞ்சாலை துறையினராலும் சாலை மேம்பாட்டு பணி ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரங்களில் குழி தோண்டி மண்ணை அதே இடத்தில் குவிக்கின்றனர். ஆடி மாதமான தற்போது பலத்த காற்று வீசுவதால், சாலைகளில் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இ.வி.என்.சாலை, ஸ்டோனி பிரிட்ஜ் அருகே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி குவித்த மண்ணால், புழுதி புயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மேம்பாட்டு பணிகளால் வாகன ஓட்டிகள், குறிப்பாக டூவீலரில் செல்வோர் புழுதியால் வெகுவாக பாதிக்கின்றனர். ஒரு சாலையை எத்தனை முறைதான் தோண்டுவது, புதியதாக அமைப்பது என்பதே இல்லை. இஷ்டத்துக்கு தோண்டி போட்டு வேலை பார்க்கின்றனர். அப்படியே மிக முக்கியம் என்றாலும், தோண்டிப்போட்ட மண்ணை முறையாக அகற்ற வேண்டாமா?. இவ்வாறு கூறினர்.