/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரும்பள்ளம் ஓடையில் பாயும் சாயக்கழிவு நீர்
/
பெரும்பள்ளம் ஓடையில் பாயும் சாயக்கழிவு நீர்
ADDED : மே 24, 2024 06:43 AM
ஈரோடு : ஈரோடு மாநகரில் பழமையான மழை நீர் வடிகாலாக பெரும்பள்ளம் ஓடை திகழ்கிறது. திண்டலில் இருந்து காவிரி ஆறு வரை, 12 கி.மீ., மாநகரின் குறுக்கே ஓடுகிறது. இந்த ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை நீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. நன்னீராக ஓடிய பெரும்பள்ளம் ஓடை, தற்போது சாய பட்டறைகளின் சாயக்கழிவு நீர் செல்லும் ஓடையாக மாறி விட்டது. குறிப்பாக மழை காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடும் போது, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு, சலவை ஆலை கழிவு ஓடையில் திறக்கப்படுகிறது.
தற்போது மாநகரில் மழை பெய்து வரும் நிலையில், இதை பயன்படுத்தி, சாய ஆலை உரிமையாளர், தங்களின் ஆலை கழிவு நீரை, பெரும்பள்ளம் ஓடையில் திறந்து விட்டுள்ளனர். இதனால் பெரும்பள்ளம் ஓடையில் நுரையுடன், துர்நாற்றத்துடன் கழிவுநீர் பாய்ந்தோடுகிறது.இதனால் நிலத்தடி நீராதாரம் பாதித்துள்ள நிலையில், நஞ்சை -ஊத்துக்குளி வாய்க்கால் பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஓடையில் திறக்கப்படும் சாயக்கழிவு நீரால், சூரம்பட்டி அணைக்கட்டில் இரு நாட்களுக்கு முன், மீன்கள் செத்து மிதந்தது குறிப்பிடத்தக்கது.