ADDED : டிச 03, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு பகுதியில் பல்வேறு சாய, சலவை பட்டறைகள்
இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில பட்டறை-களில் இருந்து சுத்திகரிப்பு
செய்யப்படாத சாயக்கழிவு நீர் வெளி-யேற்றப்படுவதாக புகார் எழுந்தது.
மாசுகட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் கடந்த வாரம் இரவில் ஆய்வு
செய்-தனர். இதில் ஒரு பட்டறையில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர், மழை
நீருடன் கலந்து வெளியேற்றப்படுவது கண்டறி-யப்பட்டது. மாவட்ட
ஒருங்கிணைப்பு குழு தலைவர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி,
சாயப்பட்டறை மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.