ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: இ.கம்யூ., பெருந்துறை ஒன்றிய கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது.
துணை செயலாளர் உமாநாத் சிங் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய பொருளாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வரும், 29ம் தேதி காலை பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்-பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஒன்றிய துணை செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.

