ADDED : ஆக 02, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:இந்திய
கம்யூ., கட்சி சார்பில் 'நீர் தருவது இயற்கை; நீர் எங்கள் உரிமை' என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு, சூரம்பட்டியில் நேற்று
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டும், தமிழகத்துக்கான உரிமை
நீரை கர்நாடகா அரசு தர மறுப்பது கண்டனத்துக்கு உரியது. உடனடியாக
நீரை வழங்க வேண்டும். மாநில தண்ணீர் உரிமையில் சமரசம் கூடாது என
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
