தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இ.கம்யூ., நடைபயணம்

இ.கம்யூ., நடைபயணம்

இ.கம்யூ., நடைபயணம்


ADDED : ஆக 10, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி, இந்திய கம்யூ., சார்பில், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமையில் நடைபயணம் நேற்று சென்றனர்.

கோபி அருகே மங்களாபுரத்தில் துவங்கிய நடைபயணத்தை, ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி துவக்கி வைத்தார். அரசூர், இண்டியம்பாளையம், உக்கரம், செண்பகப்புதுார் வரை சென்றனர். கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசனங்களை பாதுகாத்திட வேண்டும். குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உத்தரவாதப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும். தண்ணீருக்கு ஏங்கும் புதுப்பீர்கடவு, ராஜன் நகர் பகுதிகளின் தாகம் தீர்க்க வேண்டும். தாளவாடி மக்களுக்கு மோயாறு தண்ணீர் கிடைக்க வேண்டும்.

நீரேற்று பாசனங்கள் முறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us