/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதி
/
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதி
ADDED : டிச 02, 2024 03:21 AM
ஈரோடு: தொழிலாளர் துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலா-ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, கட்டுமான தொழிலாளர்-களின் குழந்தைகள், இந்திய தொழில் நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம் மற்றும் தமிழக அரசு மருத்துவ கல்லுாரி-களில் மருத்துவ சேர்க்கை பெறும் போது உரிய கல்வி கட்டணம், தங்கும் விடுதி முழு கட்டணம், வாழ்க்கை செலவுக்காக
ஒவ்வொரு ஆண்டும், 50 ஆயிரம் ரூபாய் கல்வி நிதியுதவியாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் தங்கள் குழந்-தைகளின் உரிய கல்வி சான்றுகளுடன் நிதி பெற விண்ணப்பிக்-கலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில், ஐந்து கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.