/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கழிவு நீர் ஓடையான ஆறு புல்வெளியாக அவதாரம்'
/
'கழிவு நீர் ஓடையான ஆறு புல்வெளியாக அவதாரம்'
ADDED : மே 25, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து, கூடுதுறை வரையிலான, அரை கி.மீ., துார பவானி ஆறு கழிவு நீர் குட்டையாக மாறி உள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அப்படியே ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் முழு அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் பவானி ஆறு புல்வெளி போல் காட்சியளிக்கிறது. பொதுப்பணித்துறையினர் ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்ற வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

