ADDED : மார் 20, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில்,
காந்திஜி சாலையில் பார்வதி பண்ணை முட்டை கடை உள்ளது. உரிமையாளரான
பிரபு, 23, நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றார்.
நேற்று காலை வந்தபோது, கடையின் முன்புற கதவு பூட்டு
உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல்
தெரிவித்தார். போலீசாருடன் உள்ளே சென்று பார்த்த போது உட்புற மேஜையில்
வைத்திருந்த, 9,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. சூரம்பட்டி
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

