sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈச்சர் வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்

/

ஈச்சர் வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்

ஈச்சர் வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்

ஈச்சர் வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்


ADDED : பிப் 20, 2025 07:26 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:ஒரிச்சேரிப்புதுார் அருகே, மாலா கல் நட்டுவிட்டு திரும்பிய-போது, ஈச்சர் வேன், கரும்பு டிராக்டரில் மோதிய விபத்தில், 18 பேர் காயமடைந்தனர்.

சித்தோடு அருகே பச்சப்பாளியை சேர்ந்த மாசநாய்க்கார், 60; நேற்று முன்தினம் உடல் நிலை குறைவால் இறந்தார். இந்நி-லையில் அவர்களது வழக்கப்படி, மாலா கல் நடுவதற்காக, நேற்று மாலை பவானி அடுத்த புன்னம் அருகிலுள்ள சென்னா-நாய்க்கனுாருக்கு ஈச்சர் வேனில் அவரது உறவினர்கள் சென்றனர். சென்னாநாய்க்கனுாரில் மாலா கல் நட்டபின், அனைவரும் வீடு திரும்பினர். இரவு 8:00 மணிக்கு ஒரிச்சேரிப்புதுார் அருகே சென்-றபோது, முன்னால் சென்ற வாகனத்தை, வேன் டிரைவர் முந்தி சென்றார்.

அப்போது, பவானியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு, ஆப்பக்கூடல் நோக்கி வந்த டிராக்டர் மீது வேன் மோதியது. வாகனத்தில் இருந்தவர்கள் நிலை தடுமாறி, துாக்கி வீசப்பட்-டனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த, 18 பேர் காயம-டைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர் உதவியுடன், காயமடைந்-தவர்கள் பவானி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்து, பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பச்சப்பாளியை சேர்ந்த மணி, 65; மாராக்காள், 35; அபிதா, 25. லலிதா, 39, கிட்டான், 80, ராஜம்மாள், 55, வனிதா, 33. கவுசிகா, 19 ஆகிய எட்டு பேர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ-மனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us