/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஏகாதசி பூஜை
/
சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஏகாதசி பூஜை
ADDED : செப் 04, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி. என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெருமுகையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராயப் பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு நேற்று காலை ஏகாதசி பூஜை கொண்டாடப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், எரங்காட்டூர், அண்ணா நகர், வளைய பாளையம், வரப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.