ADDED : ஆக 02, 2026 06:44 AM
கோபி:எல்நினோ
தாக்கமும், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் உள்ள சவால்களும்,
அதற்கான தீர்வு வழி முறைகளும் குறித்து, கோபி வேளாண் அறிவியல்
நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி அழகேசன், விஞ்ஞானி கார்த்திக் ஆகியோர்
கூறியதாவது:
பசுமை சூழலியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, தற்போது
உகலளவில் உணரப்படும் எல்நினோ தட்ப வெப்பநிலை மாற்றம்,
தமிழகத்தில் குறிப்பாக, ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில்,
வெப்பநிலை உயர்வு, மழைப்பொழிவு குறைவு, தீவனப்பற்றாக்குறை போன்ற
பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் நேரடி தாக்கத்தால்,
விவசாயத்துடன் மட்டுமல்லாமல், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பும்
கடுமையாக பாதிக்கிறது.
எல்நினோ சூழலால் அதிக வெப்பநிலை,
ஈரப்பதம் குறைவு கால்நடைகளிலும், கோழிகளிலும் வெப்ப அழுத்தத்தை
அதிகரிக்க செய்கிறது. இதனால் பால் உற்பத்தி குறைவது, இனப்பெருக்க
திறன் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னை
ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே அறிந்து தகுந்த முன்னெச்சரிக்கை
மேற்கொள்ள வேண்டும். தொழுவம் மற்றும் கோழிக்கூண்டுகளில் போதிய
காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். நிழல் தரும் மரங்களை வளர்ப்பதன்
மூலம் தீர்வு காணலாம். குளிர்ந்த நேரங்களில் மேய்ச்சல் பணி
மேற்கொள்ளவும், மேலும் கால்நடை ஆலோசனைக்கு, விவசாயி கள் வேளாண்
அறிவியல் நிலையத்தை அணுகவும். இவ்வாறு கூறினர்.
