மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது வீடு வீடாக சென்று விபரம் சேகரிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது வீடு வீடாக சென்று விபரம் சேகரிப்பு
ADDED : ஆக 02, 2026 06:43 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது.
முன்னதாக
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு தாங்களாகவே மக்களே முன்வந்து
தங்கள் விபரங்களை பதிவு செய்ய கடந்த, 17ம் தேதி முதல் நேற்று வரை
வாய்ப்பு தரப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் வரும், 30ம் தேதி வரை
முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி, வீடுகள் தொகுப்பு பணி
துவங்கியது. இப்பணியில் மாவட்ட அளவில், 4,464 கணக்கெடுப்பாளர், 779
மேற்பார்வையாளர், 5,043 வீட்டு பட்டியல் தொகுதி அலுவலர், 60
பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, 4,059
ஆசிரியர், 1,184 அங்கன்வாடி பணியாளர் என, 5,243 களப்பணியாளர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாவட்டத்தில் மொத்தம், 7 லட்சத்து,
87,469 வீடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. கருமாண்டிசெல்லிபாளையம்
டவுன் பஞ்., எம்.ஜி.ஆர்., நகர், நாராயணா லே-அவுட் பகுதியில், வீட்டு
பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு
செய்து, சரியான தகவல்களை வழங்க கேட்டு கொண்டார்.
