ADDED : ஆக 02, 2026 06:43 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
வனச்சரகம் ஈசப்பாறை, கரும்பாறை, நஞ்சமடைகுட்டை,
மைக்கேல்பாளையம், தங்கப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதியை
ஒட்டியுள்ள கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கூண்டு வைத்து
சிறுத்தையை பிடிக்க கோரி, ஈசப்பாறை விவசாயிகள் தரப்பில், அந்தியூர்
ரேஞ்சர் நந்தினியிடம் மனு தரப்பட்டது.
இதை தொடர்ந்து ரேஞ்சர்
நந்தினி தலைமையிலான வனத்துறையினர், ஈசப்பாறை அருகிலுள்ள முருகன்
கோவில் பகுதியில் நேற்று கூண்டு வைத்தனர். மேலும் இரண்டு தானியங்கி
கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணித்து
வருகின்றனர். அதே
சமயம் வனத்தை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள், இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என எச்சிர்க்கப்பட்டுள்ளனர்.
