ADDED : பிப் 20, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவர், எலக்ட்ரிக் பைக்கில் நேற்று காலை, 11:00 மணியளவில் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தார்
அப்போது, அவ்வழியே வந்த லாரியில் லேசாக பைக் உரசியது. இதில், நிலைகுலைந்த பழனிசாமி, பைக்குடன் கீழே சரிந்தார். அப்போது, லாரி அவர் மீது ஏறியது. இதில், படு-காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாரா-புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.