/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
/
ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
ADDED : ஜூன் 09, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அறச்சலுாரை அடுத்த ஊஞ்சலுாரை சேர்ந்தவர் தவமெய், 88; இவரின் மனைவி மூன்றாண்டுக்கு முன் இறந்து விட்டார். இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகள்கள் வீட்டில் மாறி மாறி தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் ஊஞ்சலுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றவர், திடீரென ரயில் முன் பாய்ந்ததில் உடல் சிதறி இறந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.