ADDED : நவ 19, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கொடுமுடி
தாமரைபாளையத்தை சேர்ந்தவர் மெய்கண்டன், 77. கடந்த 2 ஆண்டாக மன நலம்
சற்று பாதிக்கப்பட்டு இருந்தார். அவ்வப்போது வீட்டை விட்டு சென்று,
பின்னர் மீண்டும் வீடு திரும்புவார்.
இந்நிலையில் கடந்த, 11 இரவு
வீட்டில் இருந்து வெளியேற சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதுகுறித்து அவரது மகன் சிவராம கிருஷ்ணன், கொடுமுடி போலீசில் புகார் செய்தார்.
