தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுமை துாக்குவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுமை துாக்குவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுமை துாக்குவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு பார்க் சாலையில், சுமை துாக்குவோர் சங்கங்கள் சார்பில், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று (நவ.,18) ஆர்ப்பாட்டம் நடந்தது.

நுால், ஜவுளி கட்டுகள் ஏற்றி இறக்கும் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு, நடைமுறையில் உள்ள கூலி ஒப்பந்தம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமையாளர் சங்கம் ஒத்துழைக்காமல் உள்ளனர்.

கூலி உயர்வு ஒப்பந்தத்துக்காக தொழிலாளர் நலத்துறை வாயிலாக, பலமுறை பேச்சு நடத்தியும், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. வரும், 23ல் தொழிலாளர் அலுவலகம் முன் நடக்கும் பேச்சில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது.

கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் ரெகுலர் லாரி அலுவலகங்களில், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆக., 1ல், கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. உடனடியாக கூலி உயர்வு கோரிக்கை மீது பேசி, தீர்வு காண சங்கங்கள் முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us