ADDED : ஆக 08, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே பர்கூர் பெஜ்ஜில்பாளையம் அடுத்த ஒட்டனுாரை சேர்ந்தவர் கெம்பன், 70; கூலித் தொழிலாளி. நேற்று இவரும், இவரது உறவினர்களும் தாமரைக்கரை அருகே சுண்டப்பூரில் துக்கம் விசாரிக்க சென்றனர். சுண்டப்பூர் பிரிவு அருகில், ரோட்டை கடந்து சென்ற போது, கெம்பன் மீது, தாமரைக்கரையில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கெம்பன் மீட்கப்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.