ADDED : ஜூலை 16, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:வெள்ளோடு
டி,மேட்டுபாளையம் நல்லான்தொழுவை சேர்ந்தவர் சுப்பன், 73. கடந்த
11ம் தேதி காலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி, வீட்டை விட்டு வெளியே
சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
13ம் தேதி மாலை 4:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பரமசிவம்
தோட்டத்தில், தண்ணீர் தொட்டியில் ஆண் உடல் கிடப்பதாக தகவல்
கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, இறந்தது சுப்பன் என
தெரியவந்தது. அவரது உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
