/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதசாரி மீது மோதிய மொபட் ஓட்டி சென்ற முதியவர் பலி
/
பாதசாரி மீது மோதிய மொபட் ஓட்டி சென்ற முதியவர் பலி
ADDED : ஏப் 27, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், 75; நேற்று முன்தினம் இரவு எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், நம்பியூர் சாலையில் சென்றார்.
கொண்டையம்பாளையம் பெருச்சானுார் பிரிவு அருகே, சாலையில் நடந்து சென்ற காவிலிபாளையத்தை சேர்ந்த நஞ்சப்பன், 66, மீது மொபட் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற மாரப்பன் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததில், சம்பவ இடத்தில் பலியானார். நஞ்சப்பன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.