ADDED : மார் 09, 2026 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்; அந்தியூர் அருகே வட்டக்காட்டை அடுத்த காக்கா-யனுார் மலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார், 25; இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மதியம் சென்-றுள்ளார்.
வனத்தில் அதே பகுதியை சேர்ந்த மீனா, 80, இறந்து கிடந்தார். ஊர் மக்களுக்கு தெரி-வித்த பிறகு, அந்தியூர் வனத்துறை, பர்கூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்-தியூர் ரேஞ்சர் முருகேசன் மற்றும் வனத்துறை-யினர் விசாரணையில், நேற்று முன்தினம் வனப்-பகுதிக்கு புளியம்பழம் சேகரிக்க சென்ற மீனா, யானை தாக்கி பலியானது தெரிந்தது.

