ஈரோட்டில் பல இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் பல இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 15, 2026 06:43 AM
ஈரோடு : ஈரோடு
வ.உ.சி., மைதானத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி,
'வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற விழிப்புணர்வு கலை
நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
சத்துணவு
அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் சேர்ந்து
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை, உரையாடல், நாடகம்,
சிலம்பாட்டம், கோலாட்டம் போன்றவைகளை நிகழ்த்தினர். பின், ரங்கோலி
கோலத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விளக்குகளால்
அலங்கரித்தனர்.
பின், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி கொடுமுடி
மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில்
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அனைவரும், 100 சதவீதம்
ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
அரசு இசை பள்ளி மாணவர்களின் பாடல், நாடகம், அன்னை கலை குழுவின் தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
மாவட்ட
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, தேர்தல் நடத்தும் அலுவலர்
தியாகராஜன், அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், மாவட்ட பஞ்.,
செயலர் தனம், கொடுமுடி தாசில்தார் கேசவமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள்
அன்புரோஸ், தங்கமணி, விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
