/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் பறக்கும் படை சோதனை ரூ.3.73 கோடி இதுவரை பறிமுதல்
/
தேர்தல் பறக்கும் படை சோதனை ரூ.3.73 கோடி இதுவரை பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை சோதனை ரூ.3.73 கோடி இதுவரை பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை சோதனை ரூ.3.73 கோடி இதுவரை பறிமுதல்
ADDED : ஏப் 11, 2024 07:35 AM
ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனையில், 248 வழக்குகளில், 3.73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான பறக்கும் படையினர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம், பரிசு பொருட்களை கொண்டு செல்வோரிடம், அவற்றை பறிமுதல் செய்கின்றனர். உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விடுவிக்கின்றனர். இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக கொண்டு செல்லப்பட்டதாக, 248 வழக்குகள் பதிவு செய்து, 3 கோடியே, 73 லட்சத்து, 40 ஆயிரத்து, 813 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
உரிய ஆவணங்களை சமர்பித்து, 195 வழக்குகளில், 2 கோடியே, 34 லட்சத்து, 83 ஆயிரத்து, 183 ரூபாயை விடுவித்தனர். மேலும், 53 வழக்குகளில் உரிய ஆவணங்களை சமர்பிக்காததால், 1 கோடியே, 38 லட்சத்து, 57 ஆயிரத்து, 630 ரூபாய் விடுவிக்கப்படாமல், மாவட்ட கருவூலத்தில் இருப்பில் வைத்துள்ளனர்.