ADDED : ஏப் 22, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு, 206 மொபைல் குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு தொகுதிக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான மொபைல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு சி.என்.கல்லுாரியில், 206 மொபைல் குழுக்களுக்கான பணி ஒதுக்கீடு நேற்று நடந்தது. மொபைல் குழுக்களுக்கான, 218 வேன், 30 கார்களில், ஜி.பி.எஸ்., கருவியும் பொருத்தப்பட்டது.
மொபைல் குழுக்களில் செல்லும் போலீசாருக்கான பணி நியமன ஒதுக்கீடு, ஆணை வழங்கப்பட்டது. இதில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இன்று அந்தந்த மொபைல் குழுவில் இருந்து, தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வர் என போலீசார் தெரிவித்தனர்.
