/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணி நிரந்தரம் வலியுறுத்திமின்வாரிய ஊழியர் மறியல்
/
பணி நிரந்தரம் வலியுறுத்திமின்வாரிய ஊழியர் மறியல்
ADDED : செப் 24, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :மின் வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கேயம் செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்வாரிய ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம் திட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., திருப்பூர் மாவட்ட நிர்வாகி திருவேங்கிடம், பல்லடம் திட்ட தலைவர் ஜெயராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பல்லடம், தாராபுரம், காங்கேயம் பகுதி மின்வாரிய ஊழியர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திடீரென ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், காங்கேயம் போலீசார் கைது செய்தனர்.