ADDED : ஜூன் 20, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை செயலர் தமிழரசன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஜோதிமணி, சி.ஐ.டி.யு., ஸ்ரீராம், பெரியசாமி, ஸ்ரீதேவி, குப்புசாமி உட்பட பலர் பேசினர்.மின்வாரியத்தில் உள்ள, 40,000 ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நியமித்து, மின் வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். மின் நுகர்வோரை பாதிக்கும், வேலை வாய்ப்பை பறிக்கும், வேலையிழப்பு ஏற்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். கணக்கீட்டு பணியாளர் பணி செய்திட 'மொபைல்' அல்லது 'டேப்' போன்றவற்றை மின்வாரியமே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.