ADDED : செப் 23, 2026 07:25 AM

ஈரோடு:தமிழகத்தில்
பருவமழை துவங்குவதால் மின் விபத்துக்களை தவிர்க்க, உரிய
வழிமுறைகளை கடைபிடிக்க, மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வெளியீட்டில் கூறியதாவது:
ஐ.எஸ்.ஐ.,
முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை, அரசு உரிமம் பெற்ற
ஒப்பந்ததாரர் மூலமே பொருத்த வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை
ஒயரிங், பிளக் உள்ளிட்டவைகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிட
வேண்டும்.
மின் கம்பம் ஸ்டே ஒயர், மின் கம்பத்தின் மீது கொடிக்கயிறு
கட்டுதல், துணிகளை காய வைக்கக்கூடாது. குறியலறை, கழிப்பறையிலும்
ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. புகார் அளிக்க
மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணில்
புகைப்படத்துடன் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
