/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்
/
மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்
ADDED : டிச 18, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 18-
மின்வாரிய அலுவலகத்தில், பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்கள் பெறவும், தீர்வு காணவும், ஆலோசனை வழங்கவும், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், காலாண்டுக்கு ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி, மின்வாரிய ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண்கின்றனர். இதன்படி, 4ம் காலாண்டுக்கான குறைதீர் கூட்டம் இன்று (18) காலை, 11:00 மணிக்கு, '948-ஈ.வி.என்.சாலை, மின்வாரிய ஆய்வு மாளிகை, ஈரோடு' என்ற முகவரியில் நடக்க உள்ளது. தனி நபர் மனுக்கள், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் முற்பகலிலேயே பெறப்படும்.