ADDED : செப் 12, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;மின்
உற்பத்தி, துணை மின் நிலையங்கள், வினியோக பிரிவுகளை தனியார்
மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில், 10,000 பேர்
பணியமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில், 72,000 ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம்
செய்ததுபோல, ஒப்பந்த தொழிலாளர்களை கண்டறிந்து பணி நிரந்தரம்
செய்ய வேண்டும்.
கேங்மேன் தொழிலாளர்களுக்கு களப்பணி
உதவியாளர்களாக பதவி உயர்வு பணி வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு
ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
முன், தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற கழக மாவட்ட திட்ட தலைவர்
ரங்கசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
